2024 STPM முடிவுகள் கடந்த ஆண்டை விட சிறப்பான முன்னேற்றம்!

- Shan Siva
- 24 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 24: 2024 STPM தேர்விற்கான தேசிய ஒட்டுமொத்த தரப் புள்ளி சராசரியாக 2.85 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 1,266 பேர், அல்லது 3.06 விழுக்காட்டினர் 4.00 CGPA ஐப் பெற்றனர், இது 2023 ஐ விட 150 பேர் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், ஐந்து பாடங்களிலும் 5A மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 53 என்றும், 2023 STPM தேர்வில் இது 41 ஆக இருந்ததாகவும் மலேசிய
தேர்வு வாரிய தலைவர் அமின் டாஃப் கூறினார்.
4A மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை 2023 இல் 1,087 ஆக இருந்த நிலையில், 2024 இல் 1,228 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்!
Purata PNGK STPM 2024 meningkat kepada 2.85, tertinggi setakat ini. Seramai 1,266 calon memperoleh CGPA 4.00. Penerima 5A meningkat kepada 53 orang dan 4A kepada 1,228, menunjukkan pencapaian keseluruhan semakin baik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *