மலாக்காவில் 20 மாணவிகள் பகடிவதைக்கு ஆளாகினர்- கல்வி இலாகா தீவிர விசாரணை!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, ஆக. 20-

மலாக்காவில் உள்ள தங்கும் வசதி கொண்ட ஓர் இடைநிலைப் பள்ளியில் கடந்த சனிக்கிழமை பின்னிரவில் 20 மாணவிகள் பகடிவதைக்கு ஆளான ஒரு சம்பவத்தை மாநில கல்வி இலாகா முழு அளவில் விசாரணை செய்து வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பும் நலன்களும் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரஹ்மாட் மரிமான் தெரிவித்தார்.

மூத்த மற்றும் புதுமுக மாணவர்களுக்கு இடையிலான பிரச்சினையினால் அப்பகடிவதை சம்பவம் நிகழ்ந்ததாகவும் மூத்த மாணவிகள் சொந்தமாக தண்டனையை கொடுத்ததாகவும் அவர் கூறினார். “மாணவிகளின் பாதுகாப்பு, நலன்கள் மற்றும் பாதுகாப்பாக கல்வி கற்கும் சூழலில் மாணவர்கள் இருக்கும் உரிமை ஆகியவை காரணமாக, இந்த விவகாரம் கடுமையான ஒன்றாகப் பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்த விவகாரத்தில் மாவட்ட கல்வி அலுவலகமும் மாநில கல்வி இலாகாவும் சமரசம் காணாது. முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவிகளின் பாதுகாப்பையும் நலன்களையும் எப்போதும் உறுதிப்படுத்துவதற்காக கடுமையான நடவடிக்கை என்று, நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் ரஹ்மாட் தெரிவித்தார்.

மலாக்கா, கங்கை ஊடாங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள். அப்பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியில் மூத்த மாணவிகளின் பகடிவதைக்கு ஆளானதாக தகவல் சாதனங்கள் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தன. அச்சம்பவத்தில் பல மாணவிகளின் கால்களில் சிராய்ப்புக் காயங்களும் வீக்கமும் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

சம்பவ நாளான சனிக்கிழமை, பகடிவதைக்கு ஆளான மாணவிகள் தாமதமாக தங்கும் விடுதிக்கு வந்த பின்னர் பின்னிரவு 3 மணியளவில் சில மூத்த மாணவிகளினால் பகடிவதை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட புதுமுக மாணவிகளில் சிலர், சுமார் 30 நிமிடங்களுக்கு "வாத்துகள் போல் நடக்க வைக்கப்பட்டதாகவும் சிலர் தோப்புக் கரணம் போடவைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மூத்த மாணவிகளினால் தாம் அவ்வப்போது பகடிவதை செய்யப்பட்டு வந்ததாகவும் தங்கும் விடுதியில் அம்மாணவிகள் தம் மீது இலக்கு வைத்து விடுவார்கள் என்று அஞ்சியதால் அது குறித்து வெளியில் சொல்ல தமக்கு தைரியம் வரவில்லை என்றும் ஒரு மாணவி தெரிவித்தார்.இதற்கு மேலும் தமக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தில் அம்மாணவி எடுக்கப்படும்"நேற்று முன்தினம் பின்னிரவு ஒரு மணியளவில் சுங்கை ஊடாங் போலீஸ் நிலையத்தில் அது குறித்து புகார் செய்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *