மைவி காரை சூழ்ந்து உதைத்த 20 மோட்டார் சைக்கிளோட்டிகள்!
- Muthu Kumar
- 30 Sep, 2025
பூச்சோங், செப். 30-
சிலாங்கூரின் பூச்சோங்கில் 13 சாவடிக்கு அருகில் ஒரு பெரோடுவா மைவி காரை சூழ்ந்து கொண்டு அதை எட்டி உதைத்த சுமார் 20 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர். அச்சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடந்ததாகவும் அது குறித்து 52 வயதுடைய ஒரு வாகனமோட்டியினால் அதே நாளில் இரவு சுமார் 10 மணியளவில் புகார் செய்யப்பட்டதாகவும், செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.
"அச்சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். அதில் சுமார் 20 மோட்டார் சைக்கிளோட்டிகள் தேடப்படுகின்றனர் சம்பந்தப்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை தேடி கைது செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன" என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
இருபத்தொன்பது நிமிடங்கள் கொண்ட ஒரு காணொளியில், மோட்டார் சைக்கிளோட்டிகள் அந்த மைவி காரின் இரு பக்கத்திலும் மிக அருகில் வந்து காரை எட்டு உதைப்பதும் ஒருவர் அக்காரின் ஓட்டுநரை குத்தியதும் பதிவாகி இருக்கிறது. இதனால் அக்காருக்கு சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



