சிறுமியைக் கர்ப்பமாக்கிய 21 வயது தொழிலதிபர் நீதிமன்றத்தில் ஆஜர்!

top-news
FREE WEBSITE AD

மூவார். ஜன 19:  சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, 21 வயதுடைய இளம் தொழிலதிபர் ஒருவர், இன்று  மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆஜர்படுத்தப்பட்டார்.

முகமது அனிக் சயபில் முகமது சஹரில் என்ற அந்த நபர், நீதிபதி மொஹமட் கைரி ஹரூன் முன்னிலையில் ர் குற்றமற்றவர் என வாதிட்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில், பத்து பகாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், அப்போது 15 வயதாக இருந்த சிறுமியை, இரு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, தற்போது 20 வார கர்ப்பமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, கர்ப்பம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்தது. விசாரணையில், 2024ஆம் ஆண்டிலிருந்து குற்றம்சாட்டப்பட்ட நபரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் நெருங்கிய உறவில் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த வழக்கு, குற்றச் சட்டம் பிரிவு 376(1) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கூடவே கசையடியும் விதிக்கப்படலாம்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *