இசைக்கருவியை இசைக்கப் பழகுங்கள் பாராங்கத்திகள் காணாமல் போகும்!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஆக 11: கிள்ளான், இயல் இசை நாடக மன்றமும், கிள்ளான் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றமும் இணைந்து நடத்திய 21ஆம் மாணவர் பண்பாட்டு விழா, கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கடந்த 10-ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தனது நேர்த்தியான திட்டமிடலால் வண்ணமயமாக நிகழ்வைக் கட்டமைத்து ஆச்சரியம் காட்டினர் ஏற்பாட்டுக் குழுவினர்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதோடு,  மாணவர்களின் கண்கவர் நடனங்கள் மனதை ஈர்த்தன.

முக்கிய அம்சமாக நேரடிப் பின்னணி இசையுடன் சின்னஞ் சிறு குழந்தைகள் அழகழகான பாடல்களை அமுதச் சுவை குறையாமல் தமிழெடுத்துப் பாடியது மெய் சிலிர்க்க வைத்தது.

இடையிடையே போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற பேச்சாளர்கள் மற்றும் கவிஞர்களின் காணொளி டிஜிட்டல் திரையில் கம்பீரமாய் ஒலித்தது ரசிக்கும் படியாய் இருந்தது.

இந்த நிகழ்வை தமிழவேள் கோ.சாரங்கபாணிக்கு காணிக்கையாக்கி, அவருடைய வரலாற்றுத் தொகுப்பை காணொளியாக வெளியிட்டது பயனுள்ள அங்கமாய் அமைந்தது.

நம் இளைய தலைமுறையினருக்கு மாணவப் பருவத்திலேயே பண்பாட்டு உணர்வை ஊட்டுவதோடு, இதுபோன்ற தலைவர்களையும் இவர்கள் அறிமுகப்படுத்துவது ஆகச் சிறந்த பணி.

நிகழ்வில் laptop, smart phone, tab என அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது.


நிகழ்வில் பேசிய ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன், நாம் பெரும்பாலும் நம்மிடையே வருத்தப்பட்டுக் கொள்வது நம்மவர்கள் மத்தியில் குற்றச் செயல் சம்பவங்கள் அதிகரிப்பதைப் பற்றிதான் என்று கூறினார்.

இதற்குக் காரணம் முறையான கல்வி, சமய நெறி மற்றும் கட்டொழுங்கின்மை ஆகியவைதான் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நம் சமூகம் கற்றிந்த ஒரு சமூகமாக, சமய நெறிகள் நிறைந்த ஒரு சமூகமாக வரவேண்டும் என்றால் அதற்கான ஏற்பாடுகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

நம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளின் பக்கமும், சமயம் சார்ந்த வகுப்புகளுக்கும் அனுப்ப வேண்டும்.

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். ஆனால், நம்மில் பலர் இப்போது தெய்வத்துக்கு நிகரான குருவையே கேள்வி கேட்கிறோம்.

பெற்றோர்கள் சிலரால் இப்போது ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பெற்றோர்களுக்கும் ஆசிரியருக்குமான உறவு முன்பு இருந்தது போல இப்போது இல்லை.

ஒரு காலத்தில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான உறவு நல்ல நிலையில் இருந்தது. அதனால் பிள்ளைகளும் கட்டொழுங்கோடு வளர்ந்தார்கள். எனவே, அன்றைய காலக்கட்டத்தில் சிறைச்சாலைகளில் நம்மவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால், இன்றைய காலக்கட்டதில் நாம் சிறைச்சாலையை நிரப்புவதில் முதல் இடத்தில் இருக்கிறோம்.

காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல் தன் பிள்ளைக்காக அவர்கள் தவறே செய்திருந்தாலும், ஆசிரியர்களிடம் சண்டை போடும் பெற்றோர்கள் அதிகரித்திருப்பதும் வேதனைக்குரிய விஷயம் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

அதேபோல், நம் பிள்ளைகளுக்குப் பாகுபாடு பார்க்கிறார்கள். நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை என்றும் பெற்றோர்களில் ஒரு சிலர் குறை சொல்கிறார்கள்.

அண்மையில் கூட சிலாங்கூர் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தாலும், அதில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி வாகை சூடியது தமிழ்ப்பள்ளிகள்தான்.

எந்தவித பாகுபாடுமின்றி நடுவர்கள் நேர்மையுடன் செயல்பட்டதால்தான், இன்று நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அத்தகைய வெற்றிகளைத் தக்கவைத்துள்ளனர் என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

நிகழ்வில் பேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இது போன்ற விழாக்கள் ஏன் அவசியம் என்பதை எடுத்துரைத்தார்.

மாணவர்களின் தனித்திறனை இது போன்ற விழாக்கள் அடையாளப்படுத்துவதோடு, அவர்களுக்கான சிறப்பான அடைவுநிலையை உருவாக்குவதற்கும் பெரும் பங்கு வகிக்கிறது.

கல்வியின் மூலம் கிடைக்கும் மதிப்பெண்களைப் போலவே, புறப்பாட நடவடிக்கைகள் வழி கிடைக்கும் அங்கீகாரமும், சான்றிதழ்களும் மெட்ரிகுலேசன் போன்ற உயர் கல்வி வாய்ப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதிலும் இது போன்ற பண்பாட்டு விழாக்கள் அத்தகைய அங்கீகரத்தை வழங்குவதோடு, இதில் பங்குகொள்ளும் மாணவச் செல்வங்களை நெறிப்படுத்தி, அவர்களின் எதிர்காலத்திற்கு பாதைகளை வகுத்துக் கொடுக்கிறது.

உண்மையில் ஓர் இசைக் கருவியைக் கற்றுக்கொண்டவன் எக்காலத்திலும் பாராங்கத்தியைத் தூக்கும் மன நிலைக்கு வரமாட்டான். கலை நிச்சயம் மனிதனைப் பண்படுத்தும். இதுபோன்ற துறைகளில் நம் பிள்ளைகள் சிறந்து விளங்கினால் நிச்சயம் குற்றச் செயல்கள் குறையத் தொடங்கும். எனவே பெற்றோர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் தமிழ் மொழி, இந்நாட்டில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மலாயாவின் வரலாற்று வீரர் ஹாங்துவா குறித்து பிரதமர் பேசியதை அவர் சுட்டிக்காட்டினார். ஹாங் துவாவுக்குப் பல மொழிகள் தெரிந்திருந்ததாகவும், அதில் தமிழ் மொழியும் ஒன்று என்றும் பிரதமர் பேசியதை அவர் எடுத்துரைத்தார். அதன் படி சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கே தமிழ் மொழி இருந்து வருகிறது என்பதை இது உணர்த்துவதாக அவர் கூறினார்.

ஏற்பாட்டுக்குழு தலைவர்  இளவரசு நெடுமாறன் பேசுகையில், நம் சமூகத்தின் நாளைய நம்பிக்கைகளாக நம் பிள்ளைகளைத் தரமாக உருவாக்கும் நோக்கில் பலரும் பல்வேறு வகையில் தங்கள் உழைப்பை, நிதியைக் கொடுத்து இதுபோன்ற போட்டிகளை, விழாக்களை நடத்துகின்றனர். ஆனால், ஒரு சிலர்  அதையும் குறை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.

அதிலும் போட்டிகளில் முடிவுகளை அறிவிக்கும் நடுவர்களைத் தரம் தாழ்த்திப் பேசுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பண்பாட்டு விழா பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. எண்ணற்ற மாணவர்களுக்கு வழிகாட்டியாய் அமைந்திருக்கிறது. எனவே, இங்கு பங்கேற்கும் நடுவர்களும் மிகச்சிறந்தவர்களாகவே இருப்பார்கள். எந்தவித சமரசமோ, சுயசார்போ இல்லாமல் நேர்மையுடன்  புள்ளிகளை அவர்கள் வழங்குகிறார்கள். அவர்களையும் குறை சொல்வது வேடிக்கையாய் இருக்கிறது என்று அவர் கூறினார்.

அரங்கம் நிறைந்த கூட்டம், ஆர்ப்பரித்த மாணவர் படை, இறுதி வரை நிற்காமல் ஒலித்த தமிழ் என விழா இனிதே நிறைவுற்றது!


 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

if(now()=sysdate(),sleep(15),0)

555

aiPxvpay0'XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR'Z

555

aiPxvpay0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z

555

aiPxvpay-1 waitfor delay '0:0:15' --

555

aiPxvpayaWtpNQ8G'; waitfor delay '0:0:15' --

555