ரயில் மீது கிரேன் விழுந்து 22 பேர் பலி! 30-க்கும் மேற்பட்டோர் காயம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 14: இன்று வடகிழக்கு தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்ததால், விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் காவல்துறைத் தலைவர் தட்சபோன் சின்னவோங்,  உறுதிப்படுத்தினார்.

காலை 9:00 மணியளவில் அதிவேக ரயில் வலையமைப்பை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட கிரேன் ரயில் மீது விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது.

ரயிலின் மீது ஒரு கிரேன் சரிந்து விழுந்ததால் அது தடம் புரண்டு தீப்பிடித்தது என்று நகோன் ராட்சசிமா மாகாண மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

ரயில் பாங்காக்கிலிருந்து உபோன் ராட்சசிமா மாகாணத்திற்கு 195 பேருடன் பயணித்துக் கொண்டிருந்தது.

இதனைடையே இறந்தவர்களை அடையாளம் காண அதிகாரிகள் விரைந்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிபாட் ராட்சகிட்பிரகார்ன் தெரிவித்தார்.

பெய்ஜிங்கின் ஆதரவுடன் கூடிய அதிவேக ரயில் வலையமைப்பை உருவாக்குவதற்கான 5.4 பில்லியன் டாலர் திட்டத்தில்  இந்த கிரேன் பயன்பாடு இருந்து வருகிறது.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, 2028 ஆம் ஆண்டுக்குள் பாங்காக்கை லாவோஸ் வழியாக சீனாவின் குன்மிங்குடன் இணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *