23 மலேசியர்கள் லெபனான் நாட்டில் நலமுடன் உள்ளனர் - மலேசிய தூதரகம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 25-

லெபனான் நாட்டில் 23 மலேசியர்களும் நலமுடன் உள்ளனர் என்பதை வெளியுறவு அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது. தலைநகர் பெய்ரூட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களாலும் தென் லெபனானில் நடைபெற்றுவரும் எல்லை கடந்த மோதல்களாலும் லெபனானில் ஒரு கொந்தளிப்பான நிலை உருவாகி உள்ளது. அந்நாட்டுக்குச் செல்லவிரும்பும் மலேசியர்கள் தங்களின் பயணத்தை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அறிக்கை ஒன்றின் வழி தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் அண்மைக் காலமாக நடைபெற்றுவரும் நிகழ்வுகளை பெய்ரூட்டில் உள்ள மலேசியத் தூதரகம் அணுக்கமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. லெபனானில் தங்கியிருக்கும் மலேசியர்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் நலனுக்கும் விஸ்மா புத்ரா (வெளியுறவு அமைச்சு) உச்சபட்ச முன்னுரிமையை தொடர்ந்து வழங்கி வரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் உள்ள மலேசியத் தூதரகத்தில் மொத்தம் 23 மலேசியர்கள் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *