ஷா அலாம் & கிள்ளானில் 24 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது!
- Sangeetha K Loganathan
- 09 Jul, 2025
ஜூலை 9,
சிலாங்கூரின் ஷா அலாம், கிள்ளான் மாவட்டங்களில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 24 வெளிநாட்டுத் தொழிலாளர் கைது செய்யப்பட்டனர். இன்று பிற்பகல் 1 மணியளவில் சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் ஷா அலாம் கிள்ளான் ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள உணவகங்களிலும் முடித்திருத்தும் நிலையங்களிலும் சோதனையை மேற்கொண்டதாக சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Khairrul Aminus Kamaruddin தெரிவித்தார். மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 24 ஆண்கள் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது அவர்களை கைது செய்ததாக சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Khairrul Aminus Kamaruddin தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 24 வெளிநாட்டினர்களும் 23 முதல் 50 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் மலேசியாவில் வேலை செய்வதற்கான எந்தவோர் ஆவணங்களையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Khairrul Aminus Kamaruddin தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 12 பேர், இலங்கையைச் சேர்ந்த 8 பேர், மியன்மாரைச் சேர்ந்த 4 பேர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் சுற்றுலா நிறுவனத்தின் மூலமாக அவர்கள் மலேசியாவுக்குள் நுழைந்ததாகவும் சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Khairrul Aminus Kamaruddin தெரிவித்தார்.
Serbuan Imigresen di Shah Alam dan Klang menahan 24 pekerja asing lelaki berusia 23 hingga 50 tahun kerana tidak memiliki dokumen sah. Mereka terdiri daripada warga India, Sri Lanka dan Myanmar yang dipercayai masuk ke Malaysia melalui syarikat pelancongan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



