RM 7.8 Million மதிப்பிலானப் போதைப்பொருள் பறிமுதல்!

top-news

டிசம்பர் 24,

சந்தேகத்திற்குரிய வாகனத்தில் சோதனையிட்டதில் 244 kilogram syabu வகை போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாக Terengganu மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin தெரிவித்தார். காலை 9 மணியளவில் 30 வயது உள்ளூர் ஆடவரின் வாகனத்தைச் சந்தேகத்தின் அடிப்படையில் பின்தொடர்ந்த காவல் துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட வாகனம் செம்பனைத் தோட்டத்தில் தனித்து விடப்பட்டதைக் கண்டு வாகனத்தைச் சோதனையிட்டதில் RM 7.8 Million மதிப்பிலானப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு திரங்கானு மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மிக அதிகமான அளவிலானப் போதைப்பொருள் இது என Terengganu மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Mohd Khairi Khairudin தெரிவித்தார். தப்பிய ஆடவரை அடையாளம் கண்டுள்ளதாகவும் விரைவில் அவரைக் கைது செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Polis Terengganu merampas 244 kilogram syabu bernilai RM 7.8 juta dari sebuah kenderaan di kawasan ladang Chempani. Suspek tempatan berusia 30 tahun melarikan diri, dan polis sedang memburu suspek.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *