ஆண்டுதோறும் 25,000 PLKN 3.0 பயிற்சியாளர்கள் வதானியா படையில் சேர்க்கப்படுவர் – பாதுகாப்பு அமைச்சு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 25-

தேசிய சேவை பயிற்சி திட்டம் (PLKN) 3.0-இல் பயிற்சி பெறும் ஆண்டுதோறும் 25,000 இளைஞர்களையும் வதானியா படையினராகப் பதிவு செய்ய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு துணை அமைச்சர் அட்லி ஸஹாரி கூறுகையில், நாடு முழுவதும் உள்ள 13 பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் தொடர்ச்சியாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

“PLKN 3.0 திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 25,000 பயிற்சியாளர்களை உருவாக்கி வருகிறோம். எதிர்காலத்தில் அவர்களை முழுமையாக வதானியா படையில் பதிவு செய்ய விரும்புகிறோம். இது அவர்கள் பெற்றுள்ள பயிற்சியைத் தொடர்ந்து மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த பயிற்சியின் தொடர்ச்சியை உறுதி செய்ய முன்னாள் பயிற்சியாளர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். பயிற்சி முகாம்களின் செயல்பாடுகளும் அதற்கேற்ப வலுப்படுத்தப்படும் என்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *