நாடு முழுவதும் 254 TB பாதிப்புகள்!
- Shan Siva
- 10 Feb, 2026
கோலாலம்பூர், பிப்
10: 2025 ஆம்
ஆண்டில் நாடு முழுவதும் காசநோய் (TB) தொடர்பாக
மொத்தம் 88 கிளஸ்டர்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 254 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ சூல்கெஃப்லி அஹமட் தெரிவித்தார். இதில் 35 கிளஸ்டர்கள்
தற்போது இன்னும் செயலில் உள்ளன என்றும் அவர் கூறினார்.
மாநில வாரியாக, சிலாங்கூரில் 13 செயலில் உள்ள TB கிளஸ்டர்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து கெட
(6), சரவாக் (5), கூட்டரசு
பிரதேசம் (5), ஜொகூர் (3), கிளந்தான்
(2) மற்றும் தெரெங்கானு (1) ஆகிய மாநிலங்களிலும் கிளஸ்டர்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு இதுவரை 10 TB கிளஸ்டர்கள் பதிவாகியுள்ளன என்றும், அவை
அனைத்தும் தற்போது செயலில் உள்ளவையாக உள்ளன என்றும் அவர் கூறினார்.
காசநோயை கட்டுப்படுத்துவதற்காக
அமைச்சின் நடைமுறைகளின்படி, போர்டிங் பள்ளிகள், சிறைகள்
மற்றும் தொழிலாளர்கள் தங்குமிடங்கள் போன்ற உயர் ஆபத்து இடங்களில்
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பரிசோதனைகளின் போது, நீண்ட கால இருமல், காய்ச்சல்,
பசியின்மை, உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகள்
கண்காணிக்கப்படுவதுடன், நுரையீரல் மருத்துவ பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே மற்றும் கப பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன
என்றார்.
TB இல்லாத நெருங்கிய தொடர்பாளர்களும்
பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று அல்லது மறைமுக TB (latent
TB) கண்டறியப்பட்டால், முன்னெச்சரிக்கை
சிகிச்சை வழங்கப்படுகிறது.
அறிகுறிகள் உள்ளவர்கள் இருமல் அல்லது
தும்மும் போது வாய் மற்றும் மூக்கை மூடி உரிய இருமல்
ஒழுக்கத்தை (cough etiquette) பின்பற்ற
வேண்டும் என சூல்கெஃப்லி அறிவுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



