873 ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளுக்கு ரிம.26.624 மில்லியன் மானியம்!
- Muthu Kumar
- 14 Aug, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
ஷா ஆலம், ஆக.14-
சிலாங்கூர் மாநில ரீதியில் செயல்படும் 873 ஆரம்ப, இடைநிலைப் பள்ளிக்கான 26.624 மில்லியன் ரிங்கிட் மானியத்தை நேற்று முன்தினம் இரவு இங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களிடம் எடுத்து வழங்கினார்.
பள்ளிக்கான மானியம் வழங்கப்படும் நிகழ்ச்சியில் மாநில துணை நிர்வாகச் செயலாளர் டத்தோ ஜோஹாரி அனுவார், மனிதவள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் கலந்து கொண்டனர்.
மாநிலத்தில் செயல்படும் அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் 5 மில்லியன் ரிங்கிட் மானியம் ஒதுக்கப்பட்டு வழங்கப்படுகிறது என்று பாப்பாராய்டு தெரிவித்தார்.இந்த மானிய உதவித் தொகையில் இருந்து 50 சதவீதம் பள்ளி வளர்ச்சிக்கும் 50 சதவீதம் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கும் பயன்படுத்தப் பட வேண்டும் என்று அவர் தமிழாசிரியர்களைக் கேட்டுக் கொண்டார்.
தமிழ்ப் பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதைக் கவனத்தில் கொண்டு செயல்படும்படி அவர் அறிவுறுத்தினார்.சிறந்த கல்வியால் மட்டுமே மாணவர் சமூகம் நாட்டின் எதிர்காலத்தை நல்வழியில் நடத்திச் செல்ல முடியும் என்று பாப்பா ராய்டு தமது கருத்தை முன் வைத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



