269ஆவது ஆட்சியாளர்கள் மாநாடு-முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 17-

இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற 269ஆவது ஆட்சியாளர்கள் மாநாட்டில் தேசியப் பாதுகாப்பு, நீதித்துறை நியமனங்கள், வேப் சிகரெட்டு புகைப்பதற்குத் தடை விதிப்பது உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அக்கூட்டத்திற்கு சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா தலைமையேற்றார் என்று அரச முத்திரைக் காப்பாளர் சைட் டானியால் சைட் அமாட் குறிப்பிட்டார்.தேசியப் பாதுகாப்பு பற்றிய இறுதி நிலவரங்கள் குறித்து போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயிலும் தேசியத் தற்காப்பு பற்றிய இறுதி நிலவரங்கள் குறித்து ஆயுதப்படைகளின் தலைவர் நிஸாம் ஜபாரும் ஆட்சியாளர்களுக்கு எடுத்துரைத்தனர்.

கூட்டரசு நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் மலேசியாவில் அகதிகள் மற்றும் நீதிபதிகளின் நியமனம் குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. சபா, சரவாக் தலைமை நீதிபதியின் நியமனம், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவரின் நியமனம், தலைமை நீதிபதி நியமனம் போன்ற விவகாரங்களும் அதில் விவாதிக்கப்பட்டன என்று சைட் டானியால் சொன்னார். நாட்டில் வேப் புகைப்புச் சாதனங்கள் அல்லது மின்சிகரெட்டுகள் போன்றவற்றின் விற்பனை மற்றும் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்யும் பரிந்துரை குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அடைக்கலம் நாடியிருப்பவர்களின் திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் அக்கூட்டத்தில் விளக்கப்பட்டது என்று சைட் டானியால் கூறினார். பெர்லிஸ் ராஜா துவாங்கு சைட்
சிராஜூடின் ஜமாலுலாயில், பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா, கெடா சுல்தான் அல்-அமினுல் கரிம் சுல்தான் சாலாஹூ டின், நெகிரி செம்பிலான் 5 ஆகியோர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும், கிளந்தானின் பட்டத்து இளவரசர் தெங்கு முகமது ஃபக்ரி பெட்ரா, துங்கு தெமங்கோங் ஜொகூர் துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் சுல்தான் இப்ராஹிம், தெங்கு அரிப் பெண்டாஹாரா பகாங் தெங்கு முகமது இஸ்கண்டார் ரியாத்துடின் ஷா ஆகியோரும் அதில் கலந்து கொண்டனர்.

சரவாக் ஆளுநர் வான் ஜூ னாய்டி துவாங்கு ஜபார், மலாக்கா ஆளுநர் அலி ருஸ்தாம், சபா ஆளுநர் மூசா அமான், பினாங்கு ஆளுநர் ரம்லிஙா தாலிப் மற்றும் முதலமைச்சர்கள், மந்திரி பெசார்கள், சரவாக் முதல்வரின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கு கொண்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *