27 வயது பெண் மானபங்கம் கோயில் பூசாரிக்கு வலைவீச்சு!
- Muthu Kumar
- 09 Jul, 2025
சிப்பாங், ஜூலை 9
கோயிலுக்கு வந்த 27 வயது பெண்ணை மானபங்கம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிலாங்கூர், சிப்பாங், பண்டார் பாரு சாலாக் திங்கியில் உள்ள ஓர் இந்துக் கோயிலின் பூசாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒரு சடங்கின்போது தமது முகத்திலும் உடலிலும் நீரைத் தெளித்த பின்னர் அந்த சந்தேகப்பேர்வழி தம்மை மானபங்கம் செய்ததாக, அப்பெண் இம்மாதம் 4 ஆம் தேதி போலீஸில் புகார் செய்ததாக, சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட கோயிலின் பூசாரி வெளிநாடு சென்றிருப்பதால், ஒரு வெளிநாட்டினரான இந்தப் பூசாரி, அக்கோயிலில் தற்காலிகமாக பூசாரியாக இருந்து வந்ததாக, நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் நோர்ஹிஸாம் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரைக்குமான சிறை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் ஏதாவது இரண்டு தண்டனைகளை விதிக்க வகை செய்யும், ஒருவரை மானபங்கம் செய்யும் நோக்கத்தில் கிரிமினல் பலாத்காரம் புரிந்ததற்கான குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 354இன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
Seorang wanita berusia 27 tahun mendakwa dicabul oleh seorang sami kuil Hindu di Sepang, Selangor ketika upacara di kuil. Polis kini sedang memburu sami warga asing tersebut yang didakwa mencabul selepas menyimbah air suci pada mangsa. Kes disiasat bawah Seksyen 354 Kanun Keseksaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



