இவ்வாண்டில் 28 ஆயிரம் பேர் நாட்டிலிருந்து வெளியேற்றம்
- Muthu Kumar
- 30 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 30-
இவ்வாண்டு ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து ஜூலை 6ஆம் தேதிக்கிடையில், 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நகத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வெளியேற்றப்பட்டு இருக்கும் மொத்தம் 28,525 பேரில் 21,039 பேர் ஆடவர்கள்,6,145 பேர் பெண்கள், 778 பேர் சிறுவர்கள் மற்றும் 563 பேர் சிறுமிகள் என்று, மக்களவையில் எழுத்துப்பூர்வமான ஒரு பதிலில் சைஃபுடின் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இவர்களில் இந்தோனேசியர்கள்தான் அதிகமானவர்கள். அதாவது அவர்களின் எண்ணிக்கை மட்டும் 11,085 ஆகும். அடுத்து மியன்மார் பிரஜைகள் 4,885 பேர் மற்றும் பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 4,465 பேர் என்று அவர் கூறினார்.
இந்நிலையில், ஒரு மூன்றாம் நாட்டில் மறுகுடியேற்றம் செய்யப்படாத வரையில், அகதிகளுக்கான ஐநா மாநாட்டின் அட்டைகளை வைத்திருப்போரை மலேசியா அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பாது
என்று சைஃபுடின் தெரிவித்தார்.
குடியேற்றத்திற்கான அனைத்துலக அமைப்பின் தரவுகளை சுட்டிக் காட்டிய அவர், 2024ஆம் ஆண்டில் அகதிகள் மற்றும் அடைக்கலம் கோரிய 8,627 பேர் மறுகுடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்."
இவ்வாண்டு ஜூன் மாதம் வரையில் 947 பேர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மறுகுடியேற்றம் செய்யப்பட்டதாக சைஃபுடின் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



