குளுவாங்கில் கார்–மோட்டார் சைக்கிள் மோதல்: இருவர் பலி

top-news
FREE WEBSITE AD

குளுவாங், மார்ச் 8-

ஜொகூர் மாநிலத்தின் குளுவாங் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். விபத்தில் ஒருவரின் கால் துண்டானதாகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து அதிகாலை 1 மணியளவில் குளுவாங்–டெக் வாஹ் ஹிங் சாலையின் 6ஆவது  கிலோமீட்டர் பகுதியில் இடம்பெற்றது. யமஹா Y15ZR வகை மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 54 வயதுடைய ஆணும், அவருடன் பயணித்த 36 வயதுடைய ஆணும் விபத்தில் கடுமையாக காயமடைந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற மருத்துவ குழு இருவரும் அங்கேயே உயிரிழந்ததாக உறுதி செய்தது.

குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் பஹ்ரின் முகமது நோஹ் கூறுகையில், உயிரிழந்த இருவரும் உறவினர்கள் என்றும் அவர்கள் குளுவாங் நகரிலிருந்து தாமன் குளுவாங் பாராட் நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தை அடைந்தபோது, எதிர் திசையில் வந்த புரோட்டோன் சாகா கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் சென்ற பாதையில் நுழைந்து மோதியதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

46 வயதுடைய பெண் ஒருவர் அந்த காரை ஓட்டி வந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *