மோட்டார் சைக்களில் போதைப்பொருள் கடத்திய இளைஞர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 11,

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 5 மணியளவில் கிளந்தான் பாசி மாசில் உள்ள Bukit Lata சாலையில் சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிளைச் சோதனையிட்டதாகவும் அவர்களிடமிருந்து சுமார் 4 கிலோ எடையிலான கஞ்சா வகை போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படையான PGA தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட இருவரும் 17 வயது 20 வயதுள்ள உள்ளூர் இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் THC வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM 76,679 என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைக்காக Pasir Mas காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படையான PGA தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *