மலாக்காவில் போதைப்பொருள் முறியடிப்பு: 86.78 மில்லியன் மதிப்பிலான MDMA பறிமுதல்
- Surendran Sumdraraj
- 11 Mar, 2026
மலாக்கா, மார்ச் 11-
மோசடி அழைப்பு மையம் என சந்தேகிக்கப்பட்ட இடம், உண்மையில் சட்டவிரோத போதைப்பொருள் ஆய்வகமும் MDMA (3,4 methylenedioxymethamphetamine) வகை செயற்கை போதைப்பொருள் களஞ்சியமாகவும் இருந்தது என்பது போலீஸ் சோதனையில் தெரியவந்தது.
மலாக்கா போதைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை (JSJN) மற்றும் வணிக குற்றப்புலனாய்வு துறை (JSJK) மேற்கொண்ட உளவுத்தகவலின் அடிப்படையில் கடந்த வாரம் மலாக்கா தெங்கா பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் மொத்தம் சுமார் 86.78 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புக்கிட் அமான் JSJN இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் கூறுகையில், மார்ச் 6 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 23 முதல் 55 வயதுக்குள் உள்ள நால்வர் ஆண்கள் மற்றும் ஒருவரான பெண் என மொத்தம் ஐந்து உள்ளூர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



