30 வீடுகள் தீயில் நாசம்: தாவாவ் நீர் கிராமத்தில் பெரும் தீ விபத்து

top-news

தாவாவ், டிச. 14-

சபா மாநிலம் தாவாவ் நகரில் உள்ள கம்போங் ஸ்ரீ அமான், லோரோங் ஜேட் 4, ஜாலான் அப்பாஸ் பகுதியில் உள்ள நீர் மீது கட்டப்பட்ட கிராமத்தில் (பெர்கம்புங்கான் அத்தாஸ் ஆயிர்) குறைந்தது 30 வீடுகள் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தால் முழுமையாக எரிந்து நாசமானது.

இவ்விபத்து இரவு 11.20 மணியளவில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. ஒரு வீட்டில் தீ பிடித்து விரைவாகப் பரவியது. வீடுகள் மரம், பலகைகளால் அடர்த்தியாகக் கட்டப்பட்டிருந்ததால் தீ வேகமாக அண்டை வீடுகளுக்குப் பரவியது.

தாவாவ் தீயணைப்பு, மீட்புப் படைத் தலைவர் ஜெமிஷின் உஜின் கூறுகையில், இரவு 11.23 மணிக்கு அவசர அழைப்பு வந்ததும் 27 உறுப்பினர்கள், இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 10 நிமிடங்களில் அங்கு வந்தடைந்தனர்.

தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதுவரை உயிரிழப்பு அல்லது காயங்கள் பற்றிய தகவல் இல்லை. தீயின் காரணம் விசாரணையில் உள்ளது.

நீர் கிராமங்களில் இதுபோன்ற தீ விபத்துகள் அடிக்கடி நிகழ்வதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்க அரசு, தன்னார்வ அமைப்புகள் முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *