நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு RM 3000 ஜொகூர் முதல்வர் அறிவிப்பு!
- Shan Siva
- 11 Sep, 2025
இஸ்கண்டார் புத்ரி, செப் 11: ஜொகூர் மாநில அரசு, அண்மையில் சிறிய நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சிகாமட்டில் உள்ள 62 வீடுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்குத் தலா 3,000 ரிங்கிட் வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஜொகூர் மந்திரி பெசார்
டத்தோ ஓன் ஹபீஸ் காசி, தேசிய பேரிடர்
மேலாண்மை நிறுவனம் மூலம் மத்திய அரசின் ஆதரவில் இந்நிதி வழங்கபப்டுவதாக
உறுதிப்படுத்தினார்.
ஆகஸ்ட் 24 ஆம்
தேதி ஏற்பட்ட ஆரம்ப நிலநடுக்கத்திற்குப் பிறகு, சிறப்புக் குழு கூட்டங்கள் மூலம் மேலும் மதிப்பீடு செய்து,
சேத மதிப்பீட்டிற்காக மாவட்ட அதிகாரிகள்
உடனடியாக முகமைகள் மற்றும் சமூகத் தலைவர்களைத் திரட்டியதாக அவர் மாநில சட்டமன்றக்
கூட்டத்தின் போது கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



