30 எரிவாயு கலன்கள் வெடித்ததில் 8 வீடுகள் தீயில் கருகியது!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 4,

LPG சிலிண்டர் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 30 சிலிண்டர்கள் வெடித்ததில் அருகில் இருந்த 8 வீடுகள் தீயில் கருகின. கோத்தா பாருவில் உள்ள KAMPUNG CHABANG TIGA குடியிருப்புப் பகுதியில் இருந்த மளிகை கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த LPG எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் தீ அருகில் உள்ள வீடுகளுக்குப் பரவியதாகக் கிளாந்தான் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் FARID ISMAIL தெரிவித்தார்.

இரவு 9.30 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் குடியிருப்புப் பகுதியில் இருந்தவர்களை அப்பகுதியிலிருந்த் வெளியேற்றியதால் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என கிளாந்தான்
மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் FARID ISMAIL தெரிவித்தார். சம்மந்தப்பட்ட குடியிருப்புப் பகுதியில் உள்ள 8 வீடுகளும் பலகையாலான வீடுகள் என்பதால் தீ வேகமாகப் பரவியதாகவும் நள்ளிரவு 12 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்பட்டதாகவும் கிளாந்தான் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் FARID ISMAIL தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *