பிந்துலுவில் 30 வீடுகள் எரிந்து நாசம்; ஒருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், டிச 26: பிந்துலு பிரிவில் உள்ள சங்கான் டவுனிக்ல் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 குடிசை வீடுகள் எரிந்து நாசமான நிலையில், ஒரு கருகிய உடல் கண்டெடுக்கப்பட்டது.

சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மைய செய்தித் தொடர்பாளர் ஒருவர், பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார்.

இரவு 11.18 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், இதனால் தத்தாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஏழு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எஸ்கே சங்கான் இபான் அருகே சுமார் 30 குடிசை வீடுகள் தீயில் எரிந்ததாகவும், அவை அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதி ஒரு ஆற்றின் குறுக்கே அமைந்திருந்தது, சாலை வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *