பி.எல்.கே.என்; 30 விழுக்காடு பங்கேற்பாளர்கள் பல்வேறு காரணங்களால் கலந்து கொள்ளவில்லை!

top-news
FREE WEBSITE AD

கோத்தா திங்கி, ஜூலை 18-

தேசிய சேவை பயிற்சி திட்டம், பி.எல்.கே.என் 3.0-இன் இரண்டு தொடர்களில் இருந்து சுமார் 30 விழுக்காட்டு பங்கேற்பாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பயிற்சியில் கலந்து கொள்ளத் தவறியிருக்கின்றனர்.

அவர்கள் கொடுத்த முக்கிய காரணங்களில் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்வது ஆகியவை அடங்கும் என்று தற்காப்பு அமைச்சர், டத்தோஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

"இரண்டாவது தொடரில், 10இலிருந்து 15 விழுக்காட்டு பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் கொடுத்த பெரும்பாலான காரணங்களில் சிலர் நோய்வாய்ப்பட்டிருப்பது, இன்னும் சிலர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டது ஆகும்", என்றார் அவர்.

நேற்று, கோத்தா திங்கியில் உள்ள மலேசியா பகாங் கல்தான் அப்துல்லா பல்கலைக்கழகத்தில் கெம்பாரா லெஸ்தாரி கோத்தா திங்கி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர், டத்தோஸ்ரீ முஹமட் காலிட் அவ்வாறு கூறினார்.பி.எல்.கே.என் 3.0 இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மட்டுமே முழுமையாக செயல்படுத்த தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *