கத்தாரிலிருந்து மலேசியாவுக்கு திரும்ப 323 மலேசியர்கள் பதிவு
- Surendran Sumdraraj
- 07 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 7-
கத்தாரில் வசிக்கும் சுமார் 323 மலேசியர்கள் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள தன்னார்வத் திரும்பப்பயண திட்டத்தில் இதுவரை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இன்னும் பதிவு செய்யலாம் என்றும், இறுதி பட்டியல் இந்த சனிக்கிழமை உறுதிப்படுத்தப்படும் என்று கத்தாருக்கான மலேசிய தூதர் முகம்மது பைசல் ரஸாலி தெரிவித்தார்.
மலேசியர்களை தாய்நாட்டுக்கு கொண்டு வரும் முதல் விமானம் சவூதி அரேபியாவின் ரியாத் வழியாக திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பயண அட்டவணை இன்னும் இறுதியாக முடிவாகவில்லை எனவும் அவர் கூறினார்.
கத்தாரில் உள்ள மலேசியர்களுடன் இணையவழி விளக்கக் கூட்டத்தில் பேசிய அவர், இதுவரை சுமார் 323 பேர் மலேசியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், டோஹாவில் உள்ள மலேசிய தூதரகம் அந்நாட்டில் உள்ள மலேசியர்களைப் பாதுகாப்பாக திரும்ப அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்த பணியில் கத்தார் மலேசியர் சங்கம் (MAQ) மற்றும் பல சமூக ஒருங்கிணைப்பாளர்களின் உதவியும் பெறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



