பிரான்சில் பயங்கர காட்டுத்தீ: 3,250 ஏக்கர் வனப்பகுதி சேதம் – 2 பேர் கைது
- Surendran Sumdraraj
- 14 Jul, 2026
பாரீஸ், ஜூலை 14-
பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்குத் தென்கிழக்கே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பவுன்டைன்புளூ வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயால் சுமார் 1,300 ஹெக்டேர், அதாவது 3,250 ஏக்கர் நிலம் எரிந்து சேதமடைந்துள்ளது.
தீ வேகமாகக் குடியிருப்புப் பகுதிகளை நோக்கிப் பரவியதால் சுமார் 900 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் ஏ6 நெடுஞ்சாலையின் சில பகுதிகள் மூடப்பட்டதுடன், பாரீஸ் நகரிலிருந்து இயக்கப்படும் அதிவேக இரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர் தெளிக்கும் சிறப்பு விமானங்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காட்டுத்தீ தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக பிரான்ஸ் உள்துறை மந்திரி லாரென்ட் நுனெஜ் தெரிவித்தார். தீ தற்செயலாக ஏற்பட்டதா அல்லது திட்டமிட்டுப் பற்ற வைக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



