32 ஆவணமற்ற அந்நியக் குடியேறிகள் கைது! - ஜொகூர் குடிநுழைவுத்துறை அதிரடி

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, அக் 15: ஜொகூர் குடிநுழைவுத் துறை நேற்று ஜொகூர் பாரு மற்றும் பத்து பஹாட்டில் ஒரே நேரத்தில் அமலாக்க நடவடிக்கைகளில் 32 ஆவணமற்ற வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்தது.

ஓப்ஸ் செலேரா, ஓப்ஸ் மினியாக் மற்றும் ஓப்ஸ் சாபு என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கைகள், குடியேற்றக் குற்றங்களுக்கான ஹாட்ஸ்பாட்களாக அடையாளம் காணப்பட்ட உணவகங்கள், கார் கழுவும் மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கையில் 96 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டதாகவும், 32 பேர் குடியேற்றச் சட்டம் 1959/63 மற்றும் குடியேற்ற விதிமுறைகள் 1963 இன் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாகவும் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் தருஸ் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *