33 FC ரசிகர்கள் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப்2: நகரின் பாலத்தில் பொது அமைதியைக் குலைத்ததற்காக நேற்று மாலை கைது செய்யப்பட்ட பின்னர், சிலாங்கூர் எஃப்சி கால்பந்து ஆதரவாளர்கள் முப்பத்து மூன்று பேர் இன்று கோலா திரெங்கானு அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இன்று காலை 10.15 மணிக்கு அழைத்து வரப்பட்ட 33 ரசிகர்களும், மாலை 6.30 மணியளவில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுநீர் பரிசோதனைக்காக நேற்று தடுத்து வைக்கப்பட்டதாக கோலா திரெங்கானு காவல்துறைத் தலைவர் அஸ்லி நூர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைக்காக சம்பந்தப்பட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக அவர் கூறினார்.

சிலாங்கூர் எஃப்சி ஆதரவாளர்கள் நகர மையத்திலிருந்து செபராங் தாகீர் வரை அணிவகுத்துச் செல்லும் பல வீடியோக்கள் நேற்று முதல் வைரலாகி வருகின்றன.

நேற்று சுல்தான் மிசான் ஜைனல் அபிடின் மைதானத்தில் நடந்த போட்டிக்கு முன்னதாக இந்த சம்பவம் நிகழ்ந்தது, இதில் சிலாங்கூர் எஃப்சி திரெங்கானு எஃப்சியை 1-1 என்ற கணக்கில் நிலையில் சமன் செய்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *