சட்ட விரோதமாக வெளிநாட்டினர்களை அனுமதித்த அதிகாரிகளுடன் 33 பேர் கைது!
- THINAGAREN SANGGAREN
- 10 Jul, 2026
ஜூலை 10,
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் வெளிநாட்டினர்களை அனுமதித்த குடிநுழைவு துறையின் அதிகாரிகள் உட்பட 33 பேரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது. சம்மந்தப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சட்ட விரோதமாக மலேசியாவுக்குள் நுழையும் முதல் அவர்கள் பாதுகாப்பாக வைத்திருந்ததாக நம்பப்படும் 8 பெண்கள் உட்பட 25 ஆண்கள் என 20 முதல் 50 வயதுக்குட்பட்ட 33 பேர் SHAH ALAM MAJISTRET நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்டனர்.
குற்றத்தை மறுத்து ஜாமின் கோரிக்கையும் முன்வைத்த அனைவரின் கோரிக்கைகளையும் SHAH ALAM MAJISTRET நீதிமன்ற நீதிபதி நிராகரித்து 5 நாள்கள் தடுப்புக் காவலுக்கு உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் அரசு துறையில் குடிநுழைவு அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது. அனைவரும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளாந்தான், திரங்காணு ஆகிய வெவ்வேறு மாநில குடிநுழைவு அதிகாரிகள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



