செராஸ் மால் கலவரத்தில் ஈடுபட்ட 33 பேருக்கு 10 மாதம் சிறை!
- Shan Siva
- 21 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 21: இந்த மாத தொடக்கத்தில் செராஸில் உள்ள
ஒரு பொழுதுபோக்கு மையத்தில் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 33 பேருக்கு தலா 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து இங்குள்ள உயர் நீதிமன்றம்
இன்று தீர்ப்பளித்தது.
குற்றவியல் நடைமுறைச்
சட்டத்தின் 323வது பிரிவின் கீழ்
மறுஆய்வு விசாரணையை நடத்திய நீதிபதி அஸ்லாம் ஜைனுதீன், பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் அரசுத் தரப்பு ஆகிய
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த பின்னரே இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகக்
கூறினார்.
ஏப்ரல் 10 அன்று, குற்றம் சாட்டப்பட்ட 32 பேர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அவர்களுக்கு தலா RM3,000 அபராதம் விதித்தது. அதே குற்றத்திற்காக 19 வயதுடைய இருவருக்கு தலா RM2,000 அபராதம் விதிக்கப்பட்டது. அனைவரும் தங்கள்
அபராதத்தைச் செலுத்தினர்.
இருப்பினும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CPC) பிரிவு 323-இன் கீழ் வழங்கப்பட்ட தண்டனையின் சரியான தன்மை, சட்டப்பூர்வ தன்மை மற்றும் பொருத்தத்தை
தீர்மானிக்க உயர் நீதிமன்றம் மறுஆய்வுக்கு அழைப்பு விடுத்தது.
19 முதல் 57 வயதுக்குட்பட்ட அந்த 34 பேர், ஏப்ரல் 5 அன்று செராஸில் உள்ள ஒரு பொழுதுபோக்கு
மையத்தில், தாக்குதல்களை
நடத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், மற்றும் தடிகளும் கற்களும் உள்ளிட்ட பல்வேறு
ஆயுதங்களை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



