கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 34 வயது பெண் பலி!
- Shan Siva
- 21 Jul, 2025
கோத்தா திங்கி, ஜூலை 21: இன்று காலை KM10 ஜாலான் மாவாய்–கோலா செடிலி சந்திப்பில் திடீரென
வெளியேறும்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு பெண் கார் மீது
மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
34 வயதான
பாதிக்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக
மாவட்ட காவல்துறைத் தலைவர் யூசோப் ஒஸ்மான் தெரிவித்தார்.
காலை 8.55
மணியளவில் திடீரென பிரதான சாலையில் நுழைந்து கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாக
நம்பப்படுகிறது.
காரை ஓட்டிய 30
வயது பெண் ஓட்டுநருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பற்ற
முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக போலீசார் விசாரணையைத்
தொடங்கியுள்ளனர்.
தேவையற்ற
துயரங்களைத் தடுக்க, சந்திப்புகளில்
விழிப்புடன் இருக்கவும், போக்குவரத்து
விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியவும் வாகன ஓட்டிகளை யூசோப் அறிவுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



