350 புதிய பாலர் வகுப்புகள் - கல்வி அமைச்சின் இதர கழகங்களையும் உட்படுத்தியுள்ளது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 5-

350 புதிய பாலர் வகுப்புகளின் கட்டுமானங்கள் ஆரம்பப் பள்ளிகளை மட்டுமன்றி, கல்வி அமைச்சின் இதர கழகங்களையும் உட்படுத்தியுள்ளது. இடைநிலைப்பள்ளி, திறன் பயிற்சி கல்லூரி. மெட்ரிகுலேஷன் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் அதில் அடங்கும் என்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

"முதலாம் வகுப்பில் சேரும் பிள்ளைககள் போதுமான தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சும் மடானி அரசாங்கமும் பாலர் கல்வியை அணுகுவது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றன." என்றார் அவர்.

நேற்று மக்களவையில் பாலர் பள்ளி கல்வியின் அணுகல் மற்றும் நிலையை தெரிந்து கொள்வதற்கு பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹ்மட் ஷஹார் அப்துல்லா எழுப்பிய கேள்விக்கு வோங் கா வோ அவ்வாறு பதிலளித்தார் 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தப்படி, கல்வி அமைச்சு அளவில் பாலர் பள்ளிகள் கட்டுவதற்கு 12 கோடியே 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வோங் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *