36 குற்றவாளிகளுக்கு வலைவீச்சு! புகைப்படத்துடன் வெளியிட்ட காவல்துறை!
- THINAGAREN SANGGAREN
- 20 Feb, 2026
பிப்ரவரி 20,
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 36 பேரின் புகைப்படத்தைக் கோலாலம்பூர் காவல்துறை வெளியிட்டுள்ளது. கொலை கொள்ளை வழிப்பறி போன்ற குற்றங்களுக்காக அவர்கள் தேடப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் அவர்களைக் கண்டால் அருகிலுள்ள காவல் நிலைத்தில் புகார் அளிக்கும்படி கோலாலம்பூர் காவல்துறை தலைவர் DATO FADIL MARSUS தெரிவித்தார். 36 வயதுடைய MOHD FADHLI, 32 வயதுடைய ANDRY HERIADY, 30 வயதுடைய சதீஸ்வரன், 36 வயதுடைய யாப் கா தாத், 45 வயதுடைய நோர் அசாம், 34 வயதுடைய கார்த்திக், 30 வயதுடைய அமாட் புடீமான், 33 வயதுடைய ஹா குவான் மின், 64 வயதிடைய மியோர் பாசீர், 62 வயதுடைய லோவ் கியார் சூன், 26 வயதுடைய தெங்கு அப்தூல் முயீன், 54 வயதுடைய ரஹீம் அப்டீ, 59 வயதுடைய ஹம்சா தலீப், 40 வயதுடைய சே பைசால், 45 வயதுடைய ரோஸ்மாடி, 66 வயதுடைய ஜமீல் அவாங், 42 வயதுடைய குமரேசன், 36 வயதுடைய ஓய் சூன் வாய் என மொத்தம் 36 நபர்களின் புகைப்படத்துடன் அவர்களுடைய வீட்டு முகவரியையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த கும்பலைக் காவல்துறை தேடிவருவதாகவும் DSP RAJKUMAR தலைமையிலான தனிப்படைக்கு இவர்கள் தொடர்பாக விவரங்களைப் பகிர பொதுமக்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



