ஷா ஆலமில் 37 கார்கள் - 7 மோட்டார்சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம்!
- Shan Siva
- 25 Aug, 2025
ஷா ஆலம், ஆக 25: ஷா ஆலம் செக்சன் 24 இல் உள்ள ஒரு பட்டறையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில்
முப்பத்தேழு கார்கள் மற்றும் ஏழு மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.
சிலாங்கூர்
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ்
முக்தார் இரவு 11.31 மணிக்கு அவசர
அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.
ஷா ஆலம் மற்றும்
ஜெலுத்தோங் நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் ஒரு
தண்ணீர் டேங்கர் உதவியுடன் இருபத்தி ஒரு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு
அனுப்பப்பட்டனர்.
அவர்கள்
வந்தவுடன், 50 க்கு 100 சதுர அடி அளவுள்ள பட்டறையாக மாற்றப்பட்ட ஒரு
கட்டிடம் தீயில் மூழ்கியிருப்பதைக் கண்டனர், அதில் தோராயமாக 90% எரிந்து நாசமாகியிருந்தது.
தீ விபத்துக்கான
காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



