RM 37 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள்களுடன் இருவர் கைது!
- Thinagaren Sanggaren
- 25 Jan, 2026
ஜனவரி 25,
தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் பேராக்கில் மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் 37 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகையிலானப் போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன் இருவரைக் கைது செய்துள்ளது. ஈப்போவில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் போதைப்பொருள்கள் தயாரிக்கப்படுவதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஒரு சிறப்புக் குழு இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகப் புக்கிட் அமான் தேசிய போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Dato’ Hussein Omar Khan தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட சொகுசு ஆடம்பர பங்களாவிலிருந்து 843.33 கிலோ Methamphetamine, 679 கிலோ திரவ நிலையிலானப் போதைப்பொருள், 618 கிலோ எடையிலான MDMA மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் இதன் மொத்த மதிப்பு 37.3 மில்லிரயன் ரிங்கிட் என்றும் சுமார் 80 லட்சம் மக்கள் பயன்படுத்தும் அளவிலானது என்றும் Dato’ Hussein Omar Khan தெரிவித்தார். இந்த கும்பல் கடந்த 2024 டிசம்பர் முதல் செயல்பட்டு வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் இருவருடன் தொடர்பில் இருக்கும் ஒரு வெளிநாட்டு ஆடவரைக் காவல்துறை கண்காணித்து வருவதாகவும் Dato’ Hussein Omar Khan தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



