மலேசியாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களில் 37 % வங்காளதேசிகள் - உள்துறை அமைச்சர்
- Shan Siva
- 26 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 26: மலேசியாவில் அடித்தள வேலைகள் செய்யும் வெளிநாட்டு
தொழிலாளர்களின் மிகப்பெரிய ஆதாரமாக வங்காளதேசம் உள்ளது. கடந்த இரண்டு
ஆண்டுகளில் 4,46,000 க்கும் மேற்பட்ட வங்காள
தேசிகள் சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் நுழைந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர்
டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியன் இஸ்மாயில் தெரிவித்தார்.
.கோவிட்-19
தொற்றுநோயைத் தொடர்ந்து எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் 2022 ஆம் ஆண்டில்
49,353 வங்காளதேச தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைந்ததாக அவர் கூறினார்.
வெளிநாட்டு
தொழிலாளர் ஆட்சேர்ப்பு தளர்வு திட்டத்தின் கீழ் இந்த எண்ணிக்கை 2023 இல் 397,548
ஆக உயர்ந்தது. இது தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் தொழில்களுக்கான
பணியமர்த்தல் செயல்முறையை விரைவுபடுத்தவும் எளிமைப்படுத்தவும்
அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தற்காலிக நடவடிக்கையாகும் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஜூன்
30 நிலவரப்படி, குடிநுழைவுத்
துறை 803,332 செயலில் உள்ள தற்காலிக வேலை வாய்ப்புக்காக வங்காளதேச வருகை அனுமதி வைத்திருப்பவர்களை
பதிவு செய்துள்ளதாக சைஃபுதீன் கூறினார்.
இது மலேசியாவில்
உள்ள அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களில் 37 விழுக்காடைக் குறிக்கிறது.
2022 ஆம் ஆண்டில்,
மொத்தம் 20,331 வங்காளதேச தொழிலாளர்கள்
திருப்பி அனுப்பப்பட்டனர், மேலும் 2023 ஆம்
ஆண்டில் 23,065 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று நாடளுமன்றத்தில்
அவர் நாட்டில் உள்ள வங்காளதேசியர்களின் எண்ணிக்கை குறித்து கேட்ட பாசிர் கூடாங் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற
உறுப்பினர் ஹசான் அப்துல் கரீமுக்கு எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.
கூடுதலாக, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வங்காளதேச நாட்டினர் தங்கள் பாஸ்களை காலாவதியாக வைத்திருந்தது தொடர்பாக 790 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
WoodrowRot
Earlier today tried <a href=https://telegra.ph/Stake-Casino-Australia-2025-Your-Fair-Dinkum-Guide-to-Crypto-Punts-and-Pokies-10-13>Click here to join Stake Casino and start enjoying games in Australia</a> — fast payout. No ID needed and withdrawal in minutes. Won on first try. All over Australia.



