38,804 குறு, சிறு - நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் இலக்கவியல் மயமாக்கப்பட்டுள்ளன!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர்பாரு, ஆக 11-

எட்டு கோடியே 96 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டை உட்படுத்திய 2024ஆம் ஆண்டு மடானி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இலக்கவியல் உதவி நிதி ஜி.பி.டி.எம் வழி நாடு முழுவதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, பி.எம். கே.எஸ்-ஐ சார்ந்த 38,804 நிறுவனங்கள் இலக்கவியல் மயமாக்கப்பட்டுள்ளன.

மலேசிய மருத்துவச் சங்கம். எம்.எம்.ஏ-இன் தரவுகள் அடிப்படையில் அந்த எண்ணிக்கையில் சுமார் 19 விழுக்காடு சிகிச்சையகம் மற்றும் மருந்தகத்தை உள்ளடக்கி இருப்பதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

"இவ்வாண்டு இன்னும் அதிகமான தனியார் சிகிச்சையகங்களையும் மருந்தகங்களையும் இலக்கவியல் மயமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மானியத்தின் வழி குறைந்தது 50 விழுக்காட்டு சிகிச்சையகங்களும் மருந்தகங்களும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு," என்றார் அவர்.

தொலைத்தொடர்பு சேவைக்காக, 2024ஆம் ஆண்டில் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி-க்கு அரசாங்கம் 9 கோடி ரிங்கிட்டை வழங்கிய வேளையில், கிட்டத்தட்ட அத்தொகை முற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாண்டு, நிதி அமைச்சு கூடுதல் ஐந்து கோடி ரிங்கிட் ஒதுக்கியுள்ள வேளையில், அத்தொகையில் பி.எம்.கே.எஸ் குறிப்பாக சுகாதாரத் துறையை வலுப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் மூன்று கோடி ரிங்கிட் எம்சிஎம்சி-க்கு வழங்கப்பட்டு உள்ளதாக தியோ நி சிங் தெரிவித்தார்.ஜொகூர் பாருவில், 2025ஆம் ஆண்டு GDPM Fest எனும் நிகழ்ச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தியோ அவ்வாறு கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *