சிபுவில் கழிவு நீர்த் தொட்டியில் மூழ்கி 3 குழந்தைகள் மரணம்! -
- Shan Siva
- 05 Feb, 2026
சிபு, பிப் 5: சராவாக் சிபு ஜெயா அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள கழிவுநீர்த் தொட்டியில் மூழ்கி இறந்த நிலையில் இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட மூன்று குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை 4.03 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அழைப்பு வந்த உடனேயே சிபு ஜெயா நிலையத்திலிருந்து எட்டு பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
அங்கு வந்தவுடன், பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளான இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் சுமார் 2 மீ ஆழத்தில் உள்ள தொட்டியில் விழுந்ததாக பணியாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், மூவரும் ஏற்கனவே பொதுமக்களால் வெளியே கொண்டு வரப்பட்டனர் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
அவ்ர்கள் மூவரும் மேக்ஸ் தேவ்டின் ஷாரி மெர்டேகா, 12; அவரது 9 வயது மேக்ஸ் வெல்வைட் மெர்டேகா மற்றும் டேனியல்லா அரிசா தயாஸ் மரிங்காய்10 என அடையாளம் காணப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சின் துணை மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட மூன்று பேரும் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
உடல்கள் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



