ஸம்ரி வினோத் மீது தாக்குதல் குற்றச்சாட்டு – நான்கு பேருக்கு இரண்டு நாள் காவல்
- Surendran Sumdraraj
- 10 Mar, 2026
புக்கிட் மெர்தாஜாம், மார்ச் 10-
சர்ச்சைக்குரிய மத போதகர் ஸம்ரி வினோத் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இன்று அதிகாலை போலீசில் சரணடைந்த நான்கு ஆண்கள், விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பேரின் கைது மூலம், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது ஆறு பேராக உயர்ந்துள்ளது.
போலீசார் விசாரணையை முழுமையாக மேற்கொள்ள நான்கு நாட்கள் காவல் கோரிக்கை வைத்திருந்த நிலையில், மஜிஸ்திரேட் ரோஷயாத்தி ரடெல்லா இரண்டு நாட்கள் காவல் உத்தரவை வழங்கினார்.
முன்னதாக, குறித்த நான்கு நபர்களும் இன்று காலை சுமார் 8.35 மணியளவில் புக்கிட் மெர்தாஜாம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு போலீஸ் வேனில் கொண்டு வரப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் பொறியியலாளர்கள், ஒருவர் தொழில்நுட்ப நிபுணர் மற்றும் மற்றொருவர் வேன் ஓட்டுநர் ஆவார். அவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களைத் திரட்டும் நோக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவத்தில் தொடர்புடைய பிற நபர்களையும் அடையாளம் காண முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில், சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் உண்மையை வெளிக்கொணரவும் போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Nathan
ஜம்ரி வினோத் மீதான நாடு தழுவிய நிலையில் செய்த புகார் என்ன ஆச்சி.



