தஞ்சோங் தோகோங் பகுதியில் தீ விபத்து – 23 பேர் வீடிழப்பு
- Surendran Sumdraraj
- 03 Mar, 2026
ஜார்ஜ்டவுன், மார்ச் 3-
தஞ்சோங் தோகோங், பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் கொண்ட ஒரு குடும்பம் தங்களது இல்லத்தை இழந்தனர்.
நான்கு வீடுகள் சம்பந்தப்பட்ட இந்த தீ விபத்தில் அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு படை அமலாக்க பிரிவு உதவி இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் கூறுகையில், அதிகாலை 3.14 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் மொத்தம் 26 தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



