சபாவுக்கான 40% வருவாய்! உடனடியாகச் செயல்படுத்த அன்வார் வலியுறுத்து
- Shan Siva
- 27 Nov, 2025
கோலாலம்பூர், நவ 27: சபாவின் 40% வருவாய் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று வலியுறுத்தினார்.
நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், தனது நிர்வாகம் மாநிலத்தின் உரிமையை மதிக்கும் என்று நாடாளுமன்றத்திலும் அமைச்சரவை விவாதங்களிலும் பலமுறை உறுதிப்படுத்தியதாகக் கூறினார்.
சிலர் கூறியது போல், இந்தப் பிரச்சினை வெறும் அரசியல் முழக்கம் அல்ல என்றும், செயல்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை முதலில் அரசாங்கம் எடுத்தது என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசு இந்த உறுதிமொழியை மதிக்கும் என்றும், 40% ஐ உடனடியாக செயல்படுத்தும் என்றும் தாம் அமைச்சரவையில் வலியுறுத்தியதை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளதாக அவர் பாஜாவ் சமா கலாச்சார மண்டபத்தில் நடந்த ஒரு சந்திப்பு நிகழ்வுகளில் அவர் கூறினார்.
அக்டோபர் 17 அன்று, கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம், 1974 முதல் 2021 வரையிலான ஆண்டுகளில் சபாவின் வரி வருவாய் உரிமைகளை நிறைவேற்றத் தவறியதன் மூலம் அரசாங்கம் சட்டவிரோதமாகவும் அதன் அரசியலமைப்பு அதிகாரங்களுக்கு அப்பாலும் செயல்பட்டதாகக் கூறியது.
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் இரண்டும் செய்த சிறப்பு மானிய ஏற்பாடுகளை சட்டவிரோதமானது, தீவிரமானவை மற்றும் பகுத்தறிவற்றவை என்றும் நீதிமன்றம் அறிவித்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Pon Rangan
இது நேற்று பல ஆண்டுகளாக நடந்த தெரிந்த மாமா மகதீர் காலம் முதல் நடந்ததுள்ளது. சபா சரவாக்குக்கு மின்சார எரி சக்தியில் கூட நடுவணும் தி என் பியும் நிதி உதவியில் கெடு பிடிதான். அதையும் ஆராயவும் நன்றி.



