சவுதியில் கோர விபத்து! 42 இந்தியர்கள் பலி
- Shan Siva
- 18 Nov, 2025
கிள்ளான், நவ 18: சவுதி அரேபியாவில் புனிதப் பயணம்சென்ற பயணிகள் பேருந்தும் கொள்கலன் லாரியும. நேற்று மோதி விபத்துக்குள்ளானதில் 45 பேர் மாண்டனர். அவர்களில் 42 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கலீஜ் டைம்ஸ் (Khaleej Times) ஊடகம் தெரிவித்துள்ளது.
பேருந்து மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்தபோது பெரும்பாலான பயணிகள் உறங்கிக் கொண்டிருந்ததாகவும்,
அதனால் பேருந்து தீப்பற்றி எரிந்தபோது அவர்களால் உடனடியாகத் தப்பித்து ஓட முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. பேருந்தில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்.
மாண்டவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் உறுதிசெய்து வருகின்றனர். பேருந்து முற்றிலுமாகத் தீயில் கருகியதால் பயணிகளை அடையாளம் காணும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒருவர் உயிர்பிழைத்து மருத்துவமனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



