செராஸ் பொழுதுபோக்கு மையம் தாக்குதல் தொடர்பாக 43 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 8: செராஸில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் திங்களன்று நடந்த கலவரம் மற்றும் நாசவேலைகள் தொடர்பாக, இந்தச் சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் உட்பட மொத்தம் 43 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்தக் குண்டர் கும்பலை வாடகைக்கு அமர்த்திய ஒரு சீன நாட்டவரே முக்கிய சந்தேக நபர் என்று நம்பப்படுகிறது.

ஆயுதங்களுடன் கூடிய நாசவேலை மற்றும் கலவரம் தொடர்பான  தண்டனைச் சட்டத்தின் 427 மற்றும் 148 பிரிவுகளின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர்  ஃபாடில் மார்சுஸ் முன்னதாகக் கூறியிருந்தார்.

அந்தக் கும்பல், ஒரு லாரியைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு மையத்தின் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, பின்னர் வளாகத்திற்குள் புகுந்து பல பொருட்களைச் சேதப்படுத்திய சம்பவம் அந்த வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *