RM 4.4 மில்லியன் மதிப்புடைய மின்னணுக் கழிவுகள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

பெந்தோங், ஜூலை 3: பகாங் சுங்கத் துறை, மின்னணுக் கழிவுகள் மற்றும் அலுமினியக் கழிவுகள் சம்பந்தப்பட்ட இரண்டு கடத்தல் முயற்சிகளை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி, போர்ட் கிள்ளான் வடக்கு துறைமுகத்தில் 44 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஏழு கொள்கலன்களை பறிமுதல் செய்தது.

மே 21 அன்று ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகள், பெந்தோங் சுங்க அமலாக்கப் பிரிவு மற்றும் சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டதாக பங்காங் சுங்கத்துறை இயக்குனர் முகமட் அஸ்ரி செமான் செய்தியாளர் சந்திப்பில்  கூறினார்.

முதல் சோதனையில், 40 அடி உயரமுள்ள மூன்று கொள்கலன்களில் RM700,890 மதிப்புள்ள 46,726 கிலோ மின்னணுக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாவது நடவடிக்கையில் 105,760 கிலோ அலுமினியத் துண்டுகளை ஏற்றிச் செல்லும் நான்கு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

அத்தகைய இறக்குமதிகளுக்கு மலேசியாவின் தரநிலை மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIRIM) ஒப்புதல் தேவை என்றும், இது முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் (MITI) கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் முகமட் அஸ்ரி விளக்கினார்!
Jabatan Kastam Pahang  berjaya menggagalkan dua cubaan penyeludupan sisa elektronik dan aluminium di Pelabuhan Klang Utara. Tujuh kontena bernilai RM4.4 juta dirampas hasil operasi bersama Jabatan Alam Sekitar Selangor, melibatkan sisa elektronik dan aluminium tanpa kelulusan SIRIM serta MITI.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *