KLIA-வில் சிக்கிய RM 45 கிலோ கஞ்சா! - நால்வர் கைது

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஏப் 14: இந்த மாத தொடக்கத்தில் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) இரண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை காவல்துறை முறியடித்துள்ளது. இதில், RM42 லட்சத்துக்குமான அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச சந்தைக்காக, குறிப்பாக ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக நம்பப்படும், RM36 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதே இதில் மிகப்பெரிய பறிமுதல் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசாலி கஹார் கூறினார்.

ஏப்ரல் 6 ஆம் தேதி, மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் துணைப் போலீசார் சந்தேகத்திற்கிடமான மூன்று பயணப் பைகளை இடைமறித்தபோது, ​​போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கே.எல்.ஐ.ஏ போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்தப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 பொட்டலங்களில் இருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மூன்று பைகளும் சர்வதேச விமானத்தில் ஏறவிருந்த உள்ளூர் ஆண்களுக்குச் சொந்தமானவை என்று அவர் இன்று இங்குள்ள சிலாங்கூர் காவல் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *