பினாங்கில் 49.38 கிலோகிராம் கஞ்சா பறிமுதல்! - மூவர் கைது
- Shan Siva
- 16 Oct, 2025
பாலிக் பூலாவ், அக் 16: 1,53,078 ரிங்கிட் மதிப்புள்ள 49.38 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதைத்
தொடர்ந்து, போதைப்பொருள்
கடத்தல் கும்பலை போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், இரண்டு
சகோதரர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த
வெள்ளிக்கிழமை பினாங்கு பந்தாய் ஜெரெஜாக் மற்றும் கெடாவின் சுங்கை பெட்டானி ஆகிய
இடங்களில் நடந்த இரண்டு சோதனைகளின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தென்மேற்கு
மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சசாலி ஆடம் தெரிவித்தார்.
உளவுத்துறை
மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு குழு இரவு 9 மணியளவில் பந்தாய் ஜெரெஜாக்கில் முதல் சோதனையை
மேற்கொண்டது.
வாகனத்தை சோதனை
செய்ததில் 49.38 கிலோகிராம்
எடையுள்ள 65 கஞ்சா
அடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன, அதன் மதிப்பு 153,078 ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கைது
நடவடிக்கையின் விளைவாக, சுங்கை
பட்டானியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டாவது சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அங்கு
மூன்றாவது சந்தேக நபரான ஒருவரின் மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டார்.
அண்டை
நாட்டிலிருந்து கஞ்சாவை பெற்று, நிலவழியாக கடத்தி,
பின்னர் உள்ளூர் நெட்வொர்க்குகளில் விநியோகிக்க
இடைத்தரகர்களுக்கு வழங்கியதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன என்று சசாலீ கூறினார்.
பினாங்கு மற்றும்
வட மாநிலங்களில் உள்ள பகுதிகளை குறிவைத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சிண்டிகேட் தீவிரமாக கஞ்சா
கடத்தி வந்ததாக நம்பப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட
கஞ்சா 98,700 பேருக்கு விநியோகிக்கும்
அளவைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது!
இந்த வழக்கு
தொடர்பாக மொத்தம் 23,500 ரிங்கிட்
மதிப்புள்ள இரண்டு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குற்றவியல்
மற்றும் போதைப்பொருள் தொடர்பான பதிவுகளைக் கொண்ட மூவரும் விசாரணைகளுக்கு உதவ ஏழு
நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சசாலி மேலும் கூறினார்.
அனைத்து சந்தேக
நபர்களும் 1952 ஆம் ஆண்டு
ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனையை விதிக்க இது
வகை செய்கிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



