BAS.MY இலவச பேருந்து சேவையின் வழி 49,611 பேர் பயனடைந்துள்ளனர்
- Shan Siva
- 27 Oct, 2025
கோலாலம்பூர், அக் 27:
போக்குவரத்து அமைச்சகத்தின் BAS.MY இலவச பேருந்து சேவையின் வழி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 49,611 பேர் பயனடைந்துள்ளனர்.
BAS.MY சலுகை அட்டை திட்டத்தைப் பயன்படுத்தும்
பயணிகளில் 78 விழுக்காட்டினர் மூத்த குடிமக்கள் என்று போக்குவரத்து அமைச்சர்
அந்தோணி லோக் தெரிவித்தார்.
13% பயனர்கள் மாணவர்களாகவும், 6% பேர்
மாற்றுத்திறனாளிகளாகவும், 3% பேர் பல்கலைக்கழக மாணவர்களாகவும் உள்ளனர்.
இந்த சேவை மாநில
தலைநகரங்கள் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்குக்கு பகுதிகளை மையமாகக் கொண்ட ஸ்டேஜ் பஸ்
சேவை மாற்றத் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்த சேவை
தற்போது கங்கார், கோத்தா ஸ்டார், ஈப்போ, சிரம்பான், மலாக்கா, ஜொகூர் பாரு, கோல திரெங்கானு, கோத்தா பாரு
மற்றும் கூச்சிங் ஆகிய இடங்களில் இயங்குகிறது என்று லோக் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



