RM 40 லட்சம் மதிப்பிலான மானிய விலை சமையல் எண்ணெய் பறிமுதல்!
- Muthu Kumar
- 13 Nov, 2025
கோலாலம்பூர், நவ 13:
ஜனவரி 2024 முதல் அக்டோபர் 2025 வரை பதிவு செய்யப்பட்ட முறைகேடு வழக்குகள் தொடர்பாக RM4 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மானிய சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மானிய விலை சமையல் எண்ணெய் விநியோக முறையில் கசிவுகளைக் கட்டுப்படுத்த தொடங்கப்பட்ட Op Tiris 3.0, மொத்தம் 861 வழக்குகளைக் கண்டறிந்துள்ளதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.
ஜனவரி 1, 2024 முதல் அக்டோபர் 31, 2025 வரை, மானிய விலை சமையல் எண்ணெயை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான மொத்தம் 861 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மொத்த பறிமுதலின் மதிப்பு RM4,231,062.10 என கணக்கிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



