கெடா பள்ளியில் மாணவரைத் தாக்கிய 4 மாணவர்கள் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 27: கடந்த திங்கட்கிழமை காலை கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் சக மாணவர் ஒருவர் மயக்கமடைந்ததாகக் கூறப்படும் வழக்கில் 16 முதல் 17 வயதுடைய நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர் தனது நண்பரை அவமானப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்களில் ஒருவர் கோபமடைந்து, பாதிக்கப்பட்டவரை எதிர்கொள்ள மற்ற மூன்று மாணவர்களை அழைத்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக கோலா மூடா காவல்துறைத் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

விசாரணையில் உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களில், படிவம் 4 மாணவர் ஒருவர் மட்டுமே இன்று முதல் மூன்று நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சம்பவ இடத்தின் காணொளிப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் பள்ளி குளியலறையில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில், ஆசிரியர் ஒருவரால் சிகிச்சைக்காக சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் தாய்க்கு திங்கட்கிழமை காலை 9.05 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிகாலை 12.10 மணியளவில் நடந்ததாக அறியப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *