தீபாவளியை முன்னிட்டு பள்ளிகளுக்கு 5 நாள் விடுமுறை!
- Muthu Kumar
- 08 Oct, 2025
ல்கோலாலம்பூர், அக்.8-
இவ்வாண்டுக்கான தீபாவளித் திருநாள் வரும் 20ஆம் தேதி (திங்கள்கிழமை) வருவதால் நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நல்ல செய்தியைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சரவாக்கைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்குமான செவ்வாய், புதன்கிழமைகளில் வழங்கப்படும் கூடுதல் விடுமுறை இந்த தீபத்திருநாளை இவர்கள் அனைவரும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து கொண்டாட வாய்ப்பளிப்பதாக அமைச்சு தெரிவித்தது.
வரும் 2025-2026 கல்வி ஆண்டின்படி கூடுதல் விடுமுறை பின்வரும்படி வழங்கப்படுகிறது.ஏ பிரிவான கெடா, கிளந்தான். திரெங்கானு மாநில பள்ளிகளுக்கு 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 21ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை வழங்கப்படுகிறது.பி பிரிவான மலாக்கா, ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங், பெர்லிஸ், பினாங்கு, சபா, சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம், லாபுவான், புத்ராஜெயாவிலுள்ள பள்ளிகளுக்கு | 21ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 22ஆம் தேதி (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்படுகிறது.
சரவாக் மாநிலப் பள்ளிகளுக்கு 20ஆம் தேதி (திங்கள்கிழமை) மட்டுமே விடுமுறை வழங்கப்படும்.இதன் வழி பள்ளி தரப்பினர் சனிக்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறையைப் பெறுவர்.இந்த அறிவிப்பின் மூலம் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்ப, நண்பர்களைக் காணச் செல்ல அல்லது பள்ளி அமர்வு தொடங்கப்படும் வரை வீட்டில் ஒய்வெடுக்க இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்று ஓர் அறிக்கையில் அமைச்சு குறிப்பிட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



