52 வயதான பெண் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு!
- Muthu Kumar
- 21 Mar, 2026
பினாங்கு, பட்டர்வொர்த், தாமான் டேசா முர்னியில் உள்ள தனது வீட்டில், 52 வயதான பெண் ஒருவர் மார்பில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், காலை சுமார் 9.30 மணியளவில், அவர்களது அடுக்கு மாடி வீட்டின் மேல் தளத்தில் உள்ள படுக்கையறையில் உடலைக் கண்டதாக பெரிட்டா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்கம் போல் காலை உணவு தயாரிக்க அவர் கீழே வராததால், அவரது கணவர் படுக்கையறையைச் சோதித்தார். கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டு இருந்ததைக் கண்ட அவர், உள்ளே நுழைந்ததும் ரத்த வெள்ளத்தில் தனது மனைவி கிடப்பதைக் கண்டார்.பின்னர், செபெராங் பெராய் வடக்கு காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை குழுவினர், தடயவியல் அதிகாரிகளுடன் இணைந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஒரு கத்தியைக் கைப்பற்றினர்.
பாதிக்கப்பட்ட பெண் மனநல சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது. முதற்கட்ட விசாரணையில், இதில் எந்தவிதமான குற்றச் செயலுக்கும் ஆதாரம் இல்லை எனத் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வரும் வரை, இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் இந்தச் சம்பவம் குறித்த முழு அறிக்கை வெளியிடப்படும் என்று செபெராங் பெராய் வடக்கு காவல் நிலையத் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



